• Dec 26 2024

காருக்குள் மர்மமாக உயிரிழந்த பிரபல நடிகர்! பேரதிர்ச்சியில் திரையுலகினர்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் பிரபல நடிகராக காணப்பட்ட நடிகர் வினோத் தாமஸ் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இச் சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மலையாளத்தில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமான வினோத் தாமஸ், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர். அதன்பின் ஒரு சில படங்களில் நடித்து வெற்றியும் கண்டுள்ளார்.

இந்த நிலையில், தனியார் ஹோட்டலில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் கார் ஒன்றில் இருந்து நடிகர் வினோத் தாமஸ் மயங்கி கிடந்துள்ளார்.

இதையறிந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் வழங்க, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார் கண்ணாடியை உடைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


எனினும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவம் இணையத்தில் ரசிகர்களிடையே மிக வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதை தொடர்ந்து விசாரணை செய்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, 'அவர் ஹோட்டலில் உள்ள பாருக்கு வந்து மது  அருந்தியுள்ளார். அதன்பின் பார்க்கிங் பகுதிக்கு சென்று தனது காரில் அமர்ந்து ஏசியை ஆன் செய்து அதற்குள் இருந்துள்ளார்.


அவர் காரின் உள்ளே ஏறும் போது கவனித்த ஹோட்டல் ஊழியர்கள் 2 மணி நேரமாகியும் மீண்டும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து அருகே சென்று பார்த்துள்ளனர்.அவரது  செல்போனுக்கும் தொடர்பு கொள்ளப்பட்ட நிலையில் அதுவும் பலனளிக்காததால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதை தொடர்ந்தே, கார் கண்ணாடியை உடைத்து வினோத் தாமஸ் உடலானது மீட்கப்பட்டுள்ளது. மேலும் காருக்குள்  வாந்தி எடுத்ததாகவும், அதன் விஷவாயு காரில் ஏசி மூலம் சுவாசிக்கப்பட்டதால் வினோத் தாமஸ் உயிரிழந்திருக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, 47 வயதான வினோத் தாமஸ் மரணத்திற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement