தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடிகை , வில்லி என ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஷகிலா. இவர் 90களில் இருந்தே ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார். தற்போது ஒரு பேட்டியில் தன் வாழ்க்கையை பற்றியும், தனக்கிருந்த ஆசைகள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த பேட்டியின் போது ஷகிலா, நான் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறியிருந்தார். எனினும், அதற்கு அவரது குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்றும் வருத்தமாக தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கள் பலரது மனதையும் நெகிழ வைத்துள்ளது.
பழைய படங்களில் கலக்கிய சகிலா, தற்போது குடும்பத்துடன் இணைந்து வாழ்கின்றார். எனினும், "தன்னுடைய குழந்தை ஆசையை வீட்டில் ஏற்காமல் இருப்பதுடன் ஏன் இந்த வயசுல இதைப் பண்ணுற என்று கேட்குறாங்க. நான் நன்றாக வளர்ப்பேன் என்று சொன்னாலும், யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க,” என்றார் ஷகிலா.
இந்த பேட்டி இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து, பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது, “சகிலா அக்கா தத்தெடுப்பதில் என்ன பிரச்சனை..? அது ஒரு குழந்தைக்கு புதிய வாழ்க்கையை கொடுக்கும் முயற்சி..!” எனக் கருத்துக்களும் தெரிவிக்கின்றனர்.
Listen News!