தமிழ் சினிமா உலகத்தில் ஒரு நடிகருக்கும் மற்றொரு நடிகருக்கும் இடையில் நடக்கும் சிறிய சம்பவங்கள் சில நேரங்களில் பெரும் விவாதங்களை உருவாக்கும். இதற்கு ஏற்றவகையில் சமீபத்திய ஒரு தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் பிளாக் பாண்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு சிவகார்த்திகேயனைப் பற்றிய தன்னுடைய அனுபவத்தைக் கதைத்துள்ளார். அவர் கூறியதாவது, "சிவகார்த்திகேயன் என் நெருங்கிய நண்பர். ஒரு நாள் அவரைப் பார்ப்பதற்காக நானும் அம்மாவும் அவரது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது, அவருடைய மேனேஜர் நம்மைப் பார்த்ததும் சிவாவை நேரில் சென்று பார்ப்பதற்கு விடாமல் 20000 ரூபாய் எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தார்." எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் "அதைப் பார்த்த அம்மா, 'நாங்கள் பணம் வாங்க வரவில்லை. பட வாய்ப்பு கேட்டுக் கொள்வதற்காக வந்திருக்கின்றோம்' என்று தெளிவாகக் கூறினார். எனினும் மேனேஜர் எதுவும் கூறாமல் சென்று விட்டார். அதன் பிறகு, சிவா என்னுடன் பேசவே இல்ல." என்று உருக்கமாகக் கூறினார் பிளாக் பாண்டி.
இந்தச் சம்பவம் அவர் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. நெருக்கமான நட்பாகத் தொடங்கிய உறவுக்கு இடையே இப்படியொரு பிளவு ஏற்பட்டது மிகவும் கவலையை அளித்தது என்பது அவர் பேசியபோது தெரியவந்துள்ளது.
குறிப்பாக சினிமா துறையில் இருந்து வரும் உறவுகள், பல முறை தொழில் வாய்ப்புகளால் பாதிக்கப்படுவதை நாம் பார்த்திருக்கின்றோம். இந்த சம்பவம், திரையுலக நட்புகள் எவ்வளவு நுணுக்கமானவை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகின்றது. ஒவ்வொருவரும் தங்கள் நிலைப்பாட்டிற்கேற்ப ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கு உட்பட்டு இருப்பார்கள். சில சமயங்களில், திரையுலகத்தில் நட்பு உறவுகளை பாதிக்கும் நிலை உருவாகும். இதை பல நடிகர்கள் நேரில் அனுபவித்திருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!