• Dec 27 2024

திடீர் நெஞ்சுவலி காரணமாக பிரபல இயக்குநர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் பிரபல இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளமான சங்கீத் சிவன் தனது உடல் நலக்குறைவால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனின் சகோதரனான இவர், ஹிந்தி, மலையாள திரைப்படத்துறையில் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார்.

1998 ஆம் ஆண்டு ஸோர் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான இவர், ஹிந்தியில் இதுவரையில் 9 படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், மும்பையில் வசித்து வந்த இவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு எட்டு மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்து உள்ளார். இதனை அவரது சகோதரர் சந்தோஷ் உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 65 வயது என்பதுடன், அவரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணி அளவில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சங்கீத் சிவனின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement