• Dec 26 2024

பிரபல சீரியல் நடிகை கோர விபத்தில் பலி.. அதிர்ச்சியில் திரையுலகினர்!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தில் காணப்பட்டவர் தான் நடிகை பவித்ரா ஜெயராம். இவருக்கு 35 வயது ஆகின்றது.

இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்தில் மெகபூபா நகர் அருகே சென்றபோது அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தற்போது இந்த தகவல் வெளியாகி திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் பவித்ராவின் உறவினர். டிரைவர். சக நடிகர்  ஆகியோர் பலத்த காயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


இவ்வாறு பிரபல சீரியல் நடிகை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


இந்த விபத்தில் சிக்கியவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவர்கள் குணமடைந்த பின் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

Advertisement

Advertisement