• Dec 26 2024

ராஷ்மிகா மந்தனா மீது கேஸ் போடுவேன்.. மிரட்டல் விடுத்த ரசிகரால் பரபரப்பு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் மீது கேஸ் போடுவேன் என சமூக வலைதளம் மூலம் ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி தான் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் சமூக வலைதளத்தில் ’புஷ்பா 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது குறித்த பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த பதிவுக்கு கமெண்ட் அளித்த ரசிகர் ஒருவர் ’என்ன விளையாடுகிறீர்களா? ஆகஸ்ட் மாதத்தில் இருந்து எதற்காக டிசம்பர் மாதத்திற்கு ரிலீஸ் செய்தியை தள்ளி வைத்துள்ளீர்கள்? ரசிகர்களின் உணர்வை புரிந்து கொள்ள முடியாதா? அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உட்பட படக்குழுவினர் அனைவரும் மீதும் கேஸ் போடுவேன்’ என மிரட்டல் விடுக்கும் வகையில் அந்த ரசிகர் கமெண்ட் பதிவு செய்துள்ளார்.



ரசிகரின் இந்த கமெண்ட்டுக்கு படக்குழுவினர் விளக்கமளித்தபோது, ‘ரசிகர்களின் உணர்வை நாங்கள் புரிந்து கொள்கிறோம், ஆனால் அதே நேரத்தில் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் ஆகிவிட்டது, ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் பார்த்து பார்த்து வடிவமைத்து வருகிறோம். எனவே எங்களுடைய வேலைப்பளுவை புரிந்து கொண்டு ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்,  கண்டிப்பாக டிசம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும்’ என்றும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement