• Apr 04 2025

'எம்புரான்' படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபல நடிகர்..! உற்சாகத்தில் ரசிகர்கள்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படமாக 'லூசிபர்' காணப்பட்டது. 2019ல் வெளியான இப்படம், மலையாள சினிமா வரலாற்றையே மாற்றியமைத்த ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக காணப்பட்டது. இப்போது, அதன் இரண்டாம் பாகமான 'எல்2 எம்புரான்' படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இப்படம் குறித்து சினிமா உலகமே எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டி, 'எல் 2 எம்புரான்' படத்திற்காக மோகன்லாலுக்கும் படக்குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் 'எல் 2 எம்புரான்', லூசிபரின் தொடர்ச்சியாக உருவாகும் பிரமாண்ட அரசியல் அதிரடிப் படமாகும். மோகன்லால் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்தவகையில், மம்முட்டியின் வாழ்த்து அவர்களின் அழகான நட்பினைப் பிரதிபலிக்கும் வகையில் காணப்படுவதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். 'எல் 2 எம்புரான்' திரைப்படம் மலையாள சினிமா வரலாற்றில் அடுத்த பிரமாண்டமான படமாக அமையவிருப்பதுடன் அந்தப் பயணத்திற்கு மம்முட்டி வாழ்த்துத் தெரிவித்தது ரசிகர்களுக்கு படம் மீதான எதிர்பார்ப்பினை உயர்த்தியுள்ளது.




Advertisement

Advertisement