• Jul 20 2026

‘கட்டா குஸ்தி 2’க்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு.! வசூலிலும் கலக்கும் விஷ்ணு விஷால்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள கட்டா குஸ்தி 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜூலை 3ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், முதல் நாளிலேயே நேர்மறை விமர்சனங்களைப் பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. 

முதல் நாளில் சுமார் ரூ.2.7 கோடி வசூலித்ததாகக் கூறப்படும் இப்படம், இரண்டாவது நாளில் ரூ.4 கோடிக்கும் மேல் வசூலித்து, இரண்டு நாட்களில் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தைப் பார்த்த ரசிகர்கள், குடும்ப உறவுகள், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மற்றும் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாராட்டியுள்ளனர்.


குறிப்பாக, வீட்டு வேலைகளைச் செய்யும் ஆண்களை இழிவாகப் பார்க்கக் கூடாது, பெண்களின் கனவுகளுக்கு குடும்பத்தின் ஆதரவு அவசியம், குழந்தை பிறந்த பிறகும் பெண்கள் தங்களது இலக்குகளை அடைய முடியும் போன்ற கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

மேலும், நடிகர்களின் நடிப்பு, குழந்தை நட்சத்திரத்தின் பங்களிப்பு மற்றும் இசை ஆகியவற்றுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குடும்பத்துடன் பார்க்க ஏற்ற திரைப்படமாக ‘கட்டா குஸ்தி 2’ ரசிகர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement