• Dec 26 2024

பாலிவுட் சினிமாவை விட்டுவிலகும் பிரபல நடிகர்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி. இவர் 2013-ம் ஆண்டு ரன்வீர் சிங், சோனாக்சி சின்ஹா நடிப்பில் வெளியான 'லூட்டேரா' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதனை அடுத்து 2017 இல் வெளியான 'டெத் இன் தி கஞ்ச் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.


அப்படியே தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் 12-த் பெயில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில், இவர் நடிப்பில் 'தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற திரைப்படம் வெளியானது. கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் படம். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பாராட்டுகளை பெற்றது. 


இதனையடுத்து விக்ராந்த் மாஸ்ஸி, சினிமாவில் மேலும் உயரத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அதை விட்டு விலக போவதை தெரிவிக்கும் வகையில், தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  'கடந்த சில வருடங்கள் எனக்கு சிறப்பாக அமைந்தன. அதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். 


d_i_a

ஒரு அப்பாவாக, மகனாக மற்றும் ஒரு நடிகனாக வீட்டிற்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். 2025-ம் ஆண்டு. நாம் ஒருவரையொருவர் கடைசியாக சந்திப்போம். மீண்டும் நன்றி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடைசியாக இவர் 2 படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement