• Sep 17 2026

மொட்டை மாடி போட்டோஷூட்டை மிஞ்சிய கவர்ச்சி.. ரம்யா பாண்டியனின் ஸ்டீல்களால் ரசிகர்கள் ஷாக்

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இவர், அதன் பின்னர் ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சினிமாவைத் தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனக்கென தனி ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார்.


ரம்யா பாண்டியன் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வரும் விஷயங்களில் முக்கியமானது அவரது மொட்டை மாடி போட்டோஷூட் தான். அந்த போட்டோஷூட் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானதுடன், அவரை மேலும் பிரபலப்படுத்தியது. தொடர்ந்து விதவிதமான போட்டோஷூட்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன், தனது புகைப்படங்கள் மூலம் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


அந்த வகையில், தற்போது அவர் கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களில் ரம்யா பாண்டியன் மிகவும் அழகாகவும் ஸ்டைலிஷாகவும் காட்சியளிக்கிறார். அவரது லேட்டஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், பல்வேறு விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


குறிப்பாக, கருப்பு நிற உடையில் அவரது தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. புகைப்படங்கள் வெளியான குறுகிய நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், ரம்யா பாண்டியனின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement