தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றார். தற்போதைய ஹீரோயின்களுக்கு போட்டியாக கதாபாத்திரங்களில் கலக்கி வரும் இவர் சமீபகாலங்களாக item சாங்குகளில் நடனம் ஆடி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
ரஜினி படத்தில் இவர் நடனம் ஆடிய "காவாலா.." பாடல் உலகம் முழுவதும் வைரலாகி வந்தது அதன் பின்னர் தொடர்ந்து இவ் வகையான பாடல்களில் நடனம் ஆடுவதற்கு வாய்ப்புகள் வந்தமையினால் நான் இயக்குநரின் வேண்டுகோளிற்கிணங்கவே இப் பாடலிற்கு நடனம் ஆடினேன் அதன் பின்னர் ஒரே அவ்வகையான வாய்ப்புகளே வருகின்றன அதில் எனக்கு சிறிதும் விருப்பம் இல்லை என கூறினார்.
தற்போது தமன்னா தனக்கு கேரவனில் நடந்த ஒரு கசப்பான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.அதில் நடிகை "நான் கேரவனில் இருந்த போது எனக்கு பிடிக்காத ஒரு சம்பவம் நடந்தது அது ஒரு கசப்பான அனுபவம் மனமுடைந்து போன என் கண்கள் குணமாகின அப்போது எனக்கு சூட்டிங் இருந்ததால் என்னால் அழ முடியவில்லை அந்த தருணம் கண்ணாடியை பார்த்தே என்னை நானே தேற்றி கொண்டேன் அத் தருணத்தை மகிழ்ச்சியாக மாற்றி கொண்டேன் " என கூறியுள்ளார்.
இருப்பினும் அந்த கசப்பான சம்பவம் என்ன என்றும் எந்த படத்தில் நடந்தது என்பது குறித்து எதுவித தகவல்களையும் குறிப்பிடவில்லை இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Listen News!