• May 23 2026

தென்னிந்திய சினிமா இப்படி மாறிடுச்சா… நடிகை சாரா அலிகானின் கருத்தால் ஷாக்கில் ரசிகர்கள்

shali / 1 week ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சயீப் அலிகானின் மகளாக அறிமுகமானவர் தான் சாரா அலிகான். சினிமா உலகில் தனது தனித்துவமான நடிப்பால் விரைவில் கவனம் பெற்ற இவர், 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கேதார்நாத்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

அதனைத் தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்த அவர், தனுஷிற்கு ஜோடியாக நடித்த ‘அத்ராங்கி ரே’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.


தற்போது பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் சாரா அலிகான், சமீபத்தில் அளித்த பேட்டியில் தென்னிந்திய சினிமா குறித்து தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

அவர் கூறியதாவது, “பாலிவுட் சினிமா தான் எனக்கு அடையாளம் மற்றும் பெருமை அளித்தது. ஆனால் ஒரு நடிகையாக பல மொழி திரைப்படங்களில் நடிப்பது என் கனவு. குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். அங்கு உள்ள நடிப்பு முறை, தொழில்நுட்பம் மற்றும் கலைநயத்தை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.” என்றார்.

மேலும், இந்திய சினிமாவில் பாலிவுட்டுக்கு அடுத்ததாக தென்னிந்திய சினிமா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவரது இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. தென்னிந்திய ரசிகர்கள் பலரும் அவரது ஆர்வத்தை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement