தமிழ் திரையுலகின் இசை புயலாக விளங்கும் இளையராஜா அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட Biopic படம் மீண்டும் அருண் மாதேஷ் இயக்குவதாகவும் இளையராஜா கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இசை ரசிகர்களுக்கான மிகப்பெரிய பரிசாக பார்க்கப்படுகிறது.
இந்தப்படத்துக்கான பூஜைகள் அனைத்தும் செய்து முடித்து படத்தின் முதலாவது லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் இளையராஜாவின் பிரதிபலிப்பை அப்படியே தனுஷ் நடித்தது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கின்ற வகையில் தற்போது ஒரு தகவல் வைரலாகி வருகின்றது. அதில் இளையராயாவின் Biopic படத்தினை நிறுத்திவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் தனுஷ் தான் என சிலர் கூறிவருகின்றனர். ஏனெனில் இயக்குநர் அருண் மாதேஸ்வரனை தனுஷ் தான் அறிமுகப்படுத்தினார் எனக் குறிப்பிட்டதுடன் அருண் மாதேஷிற்கு படம் எடுப்பதற்கான அனுபவம் குறைவு அதனால் தான் படத்தை நிறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.
Listen News!