• May 22 2026

கண்மணியின் இந்த புகைப்படங்கள் மட்டும் ஏன் இவ்வளவு வைரல்… அப்படி என்ன தான் இருக்கு?

shali / 1 week ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை கண்மணி, தற்போது தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் இணையத்தில் வைரலாகி வருகிறார். 

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர், அதன் பின்னர் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரிலும் கதாநாயகியாக நடித்து தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.


நடிகை கண்மணி, கடந்த 2024ஆம் ஆண்டு தொகுப்பாளரான அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது அழகிய ஆண் குழந்தையும் உள்ளது. 

திருமணத்திற்குப் பிறகும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் கண்மணி, தனது குடும்ப தருணங்கள் மற்றும் புகைப்படங்களை ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.


அந்த வகையில் தற்போது புடவையில் எடுத்துக்கொண்ட அவரது புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை முழுவதும் ஈர்த்துள்ளது. எளிமையான மேக்கப், அழகிய சிரிப்பு மற்றும் பாரம்பரிய தோற்றத்தில் அவர் தேவதை போல காட்சியளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இன்ஸ்டாகிராமில் வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளும் கமெண்ட்ஸ்களும் குவிந்துள்ளன. “சின்னத்திரையின் தேவதை புடவையில் பேரழகு.!” என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். 

Advertisement

Advertisement