• Apr 24 2026

"ஜெயிலர் 2" படப்பிடிப்பை முடித்து சென்னை வந்த ரஜினியை கோலாகலமாக வரவேற்ற ரசிகர்கள்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்கும் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. 2023ஆம் ஆண்டு வெளியாகி இந்தியா முழுவதிலும் மாபெரும் வசூல் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அந்த தொடரின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட அளவில் தயாராகி வருகிறது. இந்த படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


ஜெயிலர் 2 படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது வரை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அத்துடன், சினிமா ரசிகர்கள் ஜெயிலர் 2 பற்றிய எந்த தகவல் வெளியானாலும் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வார்கள். 


இந்நிலையில், ரஜினிகாந்த் தற்பொழுது ஜெயிலர் 2 படப்பிடிப்பினை முடித்து விட்டு சென்னை விமான நிலையத்தில் இறங்கிய போது, சால்வை அணிவித்து ரசிகர்கள் செல்பி எடுத்து வரவேற்ற காட்சி பெரும் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement