• Apr 12 2025

இசை விழாவில் கெத்தா entry கொடுத்த விக்ரம்..! கமெண்ட் மழையைப் பொழிந்த ரசிகர்கள்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் மீண்டும் திரை ரசிகர்களின் மனங்களை ஈர்த்து வருகின்றார். அவரது புதிய படம் "வீர தீர சூரன்" இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விக்ரம் அளித்த மாஸ் என்ட்ரி, ரசிகர்களிடையே வைரலாகப் பரவி வருகின்றது.

விழாவில் பல பிரபலங்கள் பங்கேற்றிருந்தாலும், விக்ரம் வந்திறங்கிய அந்தத் தருணம் தான் இந்நிகழ்ச்சியின் ஹைலைட். விக்ரம் ஸ்டைலான ஹேர்ட் உடன் விக்ரம் வந்திறங்கிய போது ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தால் அரங்கம் முழுவதும் அதிர்ந்தது.


அதில் அவர் பேசிய கருத்துக்களுக்கு ரசிகர்கள் இடையிடையே சத்தமிட்டு கைதட்டினார்கள். “இந்த படம் ஒரு வீரனின் கதை ” என்று கூறியிருந்தது ரசிகர்கள் மனதில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்து வருகின்றார். மேலும், முக்கிய வேடங்களில் காளிதாஸ் ஜெயராம், சமுத்திரக்கனி போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ரசிகர்கள் பலர் விக்ரமைப் பார்த்து  “இது தான் மாஸ்!” எனக் கூறினார்கள். மேலும், “விக்ரமை நேரில் பார்ப்பது என் கனவு!” எனவும் கூறியுள்ளனர். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது அதிகரித்துள்ளது. 

அத்துடன் "வீர தீர சூரன்" என்பது வெறும் படமல்ல விக்ரமின் அடையாளம் எனச் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இசை வெளியீட்டு விழாவில் அவரது வருகையைத் தொடர்ந்து அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளன.  



Advertisement

Advertisement