• Dec 26 2024

அர்ஜுனுக்கு விஷத்தை வைத்து கதையை முடித்த விஜய் டிவி! தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இறுதி முடிவு

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது இறுதி அத்தியாயத்திற்கு வந்துள்ளது.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர்கள் இறுதி ஷூட்டிங் முடிந்தது என புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்கள்.

இந்த நிலையில், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இறுதி அத்தியாயத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில் அர்ஜுன் நீங்க வாங்க மாமா என குழந்தையுடன் அவரையும் கூட்டிக் கொண்டு போகிறார். அவரது சகோதரி தடுக்கவும் கேட்கவில்லை.

மறுப்பக்கம் ராகினி ரூமில் இருந்து அழுது கொண்டு இருக்க, அர்ஜுனின் அம்மா திடீரென கத்தி அழுகிறார். அதனை கேட்டு உடனே அவரது மகள் ஓடி வந்து என்ன நடந்தது என கேட்கிறார்.


அதற்கு, ராகினியை ரூமில் அடைத்து வைத்து இருக்கோம். அவன் குழந்தையை கூட விட்டு வைக்க மாட்டேன் என தூக்கிட்டு போறான். அதனால் அவன் சாப்பிடுற சாப்பாட்டுல விஷத்தை வைத்து விட்டேன் என கதறி அழுகிறார்.

இதை தொடர்ந்து அர்ஜுன் காரில் செல்லும் போதே அவருக்கு மயக்கம் வருவது போல் இருக்கிறது. அதன்பின் போலீஸ் நிலையத்தில் அர்ஜுன் நிற்க, அங்கு வந்த தமிழ் குழந்தையை கொடு என பறித்து எடுக்கிறார்.

அந்த நேரத்தில் அர்ஜுன் முடியாமல் ரத்த வாந்தி எடுக்கிறார். இதனை பார்த்து எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இவ்வாறு இந்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

ஆகவே தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இறுதி அத்தியாயம் அர்ஜுனின் அம்மாவே அவருக்கு விஷத்தை வைத்து முடிப்பது போல காட்டப்படுகிறது. அர்ஜுன் இனி உயிர் பிழைப்பாரா? இல்லை உயிர் இழப்பாரா என பார்ப்போம்.

Advertisement

Advertisement