• May 24 2026

மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் இறுதி அஞ்சலி.! முழுவிபரம் இதோ..

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல தயாரிப்பாளரும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவுநருமான ஆர்.பி. சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். 

குடும்ப திருமண நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட இந்த விபத்தில், அவர் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. கடுமையாக காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த செய்தி திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது உடல் இன்று (மே 6) சென்னை கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகு, அதே நாளில் அல்லது விரைவில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன. ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


ப்ரோ ரியாஸ் வெளியிட்ட தகவலின்படி, மதியம் 3 மணி முதல் மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அவருடைய உடல் (எண்: 16/27, 9வது தெரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

புது வசந்தம், நாட்டாமை, பூவே உனக்காக, சூரிய வம்சம், துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் ஆர்.பி. சௌத்ரி. மேலும் பல  இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். திரையுலகில் பல தலைமுறைகளை உருவாக்கிய முக்கிய நபரை இழந்த துயரத்தில் திரையுலகினர் உள்ளனர்.

Advertisement

Advertisement