• Apr 29 2026

விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. ஆனந்த தாண்டவத்தில் தல பேன்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. இதற்கு அனிருத் சை அமைத்து வருகின்றார்.

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் உடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

விடாமுயற்சிப் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக  உள்ளது.


விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் கடந்த ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்றது. தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாக உள்ளது.  இது அஜித்தின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Advertisement

Advertisement