• Apr 17 2026

பிக் பாஸ் வெற்றியை கொண்டாடி தீர்த்த எஃப்.ஜே..!! ரசிகர்கள் செய்த காரியம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் பங்கு பற்றிய நிலையில் தற்போது  11 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர்.  இந்த சீசன் முடிவடைய இன்னும் 22 நாட்களை  உள்ளன. 

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் போட்டியாளராக உள்ளே சென்றவர் எஃப்.ஜே.  இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த போது  விஜய் சேதுபதி அவருடைய பெயர் என்னவென்று கேட்டார். ஆனால் இந்த சீசன் முடிந்த பிறகு சொல்கின்றேன் என்று அவர் கூறினார். 

அதன்படி அவருடைய உண்மையான பெயர்  பெட்ரிக் ஜான். இதைத்தான் சுருக்கி எஃப்.ஜே  என்று வைத்துக் கொண்டுள்ளார்.  இந்த சீசனில்  இவர் மீது சர்ச்சைகளும் ஆதரவுகளும்  இருந்து வந்தன. இறுதியாக கடந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியேறினார். 


பிக் பாஸில் இருந்தபோது வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், பிரஜின் உடன் வாக்குவாதம்,  ஆதிரை வியானாவுடன் நெருக்கமான  நட்பு என்பவை பேசு பொருளாகவே காணப்பட்டது.  அதிலும் ஆதிரை மீண்டும்  என்ட்ரி கொடுத்த பிறகு  இவர் மிகவும் கவனிக்கப்பட்டார். 

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேடாகி வெளியே சென்ற எஃப்.ஜே   தனது வெற்றியை கொண்டாடி தீர்த்துள்ளார். அவருக்கு  மாலை அணிவிக்கப்பட்டு  ரசிகர்கள்  கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement