• Apr 19 2026

காந்தாராவைத் தொடர்ந்து அடுத்த பிரம்மாண்டம்..- 'பரசுராம்' அவதாரத்தில் புதிய புரட்சி

shali / 3 hours ago

Advertisement

Listen News!

கன்னட திரைப்பட உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Hombale Films, குறைந்த செலவில் பிரமாண்டமான படங்களை உருவாக்கும் தனித்துவத்தால் இந்திய சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ளது. K.G.F: Chapter 1 மற்றும் காந்தாரா போன்ற வெற்றி படங்களை தயாரித்த இந்த நிறுவனம், சமீபத்தில் ‘மகாஅவதார் நரசிம்மா’ என்ற அனிமேஷன் படத்தின் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.


மகாஅவதார் நரசிம்மா படம், இரண்யகசிபு, அவரது மகன் பிரகலாதன் மற்றும் மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புராணக் கதையாகும். இந்த படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளதுடன், இசையை சாம் C. S. அமைத்துள்ளார். உலகத் தரத்தில் உருவாக்கப்பட்ட அனிமேஷன் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டாவது படமாக ‘பரசுராம் அவதாரம்’ உருவாகவுள்ளது. இதையும் அஸ்வின் குமார் இயக்க, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படம் 2027ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement