• Dec 26 2024

ஸ்ரீ லங்கா சொந்தங்களுக்கு...! லாஸ்ட் போஸ்ட் போட்ட இந்திய பிரபலம்! கடும் ஷாக்கில் ரசிகர்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இலங்கையில் நடைபெற்ற Northern Uni இன் பிரமாண்ட இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்கள்.

இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தென் இந்திய பிரபலங்களான நடிகர் சிவா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி, ஆலியா மானசா, நந்தினி, ரச்சிதா மகாலட்சுமி, நடிகை ரம்பா, தமன்னா, புகழ், யோகி பாபு கலா மாஸ்டர் உள்ளிட்டோர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தனர். 

யாழ்ப்பாண முற்றவெளி திறந்த மைதானத்தில் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி, ஒரு சில தடைகளுக்கு மத்தியில் இடம் பெற்று முடிந்தது.


இதைத் தொடர்ந்து கலா மாஸ்டர், யோகி பாபுவுடன் மேலும் சில பிரபலங்கள் யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனமும் பெற்றார்கள்.

இந்த நிலையில், தற்போது சின்னத்திரை நடிகை ரட்சிதா  மகாலட்சுமி வெளியிட்ட போஸ்ட் ஒன்றில், இலங்கையில் இருந்து விடை பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு, அவருக்கு தமது ஆதரவையும், நன்றியையும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இதைவேளை, ஒரு சில ரசிகர்கள் இந்திய பிரபலங்கள் மீண்டும் தமது நாட்டிற்கு செல்வதை முன்னிட்டு பெரும் துயரில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement