• Apr 26 2026

தமிழக பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் முதல்முறையாக.. 'மஞ்சும்மெல் பாய்ஸ்’ செய்த மாபெரும் வசூல் சாதனை..!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்கள் அத்தனையும் தோல்வியை தழுவிய நிலையில், மலையாள படமான 'மஞ்சும்மெல் பாய்ஸ்’ படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் வசூலையே முறையடித்துள்ளது மஞ்சும்மெல் பாய்ஸ்.


கடந்த 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ்.


சிதம்பரம் என்பவர் இயற்றியுள்ள இந்த படம், கேரளாவில் மஞ்சுமெல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது, அதில் ஒருவர் மட்டும் குணா குகையில் சிக்கிக்கொள்ள, அவரை அவரது நண்பர்கள்  எப்படி மீட்டார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.

இந்த நிலையில், தமிழக வரலாற்றில் முதல் முறையாக மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் 50 கோடி வரை வசூலில் சாதனை படைத்துள்ளது.


Advertisement

Advertisement