• Dec 25 2024

4 ரப்பர் பேண்ட் குடுங்கடா; கார்ட்டூன் ஷோ பார்த்த மாதிரி இருக்கு!சௌந்தர்யாவுக்கு நெத்தியடி

Aathira / 22 hours ago

Advertisement

Listen News!

2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி  இதுவரையில் 7 சீசன்களை நிறைவு செய்துள்ளது. தற்போது எட்டாவது சீசனின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த வாரம் போட்டியாளர்களும் ரசிகர்களும் எதிர்பார்த்த வகையில் ஃப்ரீஸ் டாஸ்கை வைத்துள்ளார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்றைய தினம் மார்னிங் சாங் போடப்படும் முன்பே தீபக்கின் மனைவி, மகன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து உள்ளார்கள்.

காலையிலேயே ஸ்டோர் ரூம் வழியாக ரகசியமாக சென்ற தீபக்கின் மனைவியும் மகனும் நேராக தீபக்கின் அருகில் சென்று அவருடன் படுத்துக்கொண்டார். இதன் போது கண் விழித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபக், எமோஷன் ஆன காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தது.

d_i_a

இதைத் தொடர்ந்து தீபக்கின் மனைவிக்கும் டாஸ்க் ஒன்றை கொடுத்தார் பிக்பாஸ். அதில் எந்த போட்டியாளர் கருத்தில் உங்களுக்கு முரண்பாடு இருக்கின்றது என்பதை தெரிவிக்குமாறு  அறிவித்தார். அதற்கு தீபக்குடன் சண்டை போட்ட சத்யா வெளியில் தெரிவித்த வார்த்தை தனக்கு காயத்தை ஏற்படுத்தியதாக  தெரிவித்தார்.


இந்த நிலையில், லிவிங் ஏரியாவில் தீபக்கின் மனைவி சௌந்தர்யா போல நடித்துக் காட்டிய வீடியோ இணையத்தில் படு  வைரலாகியுள்ளது. அதில் அவர் தலைவிரித்து எப்போதும் இருக்கும் கோலத்தை பார்த்து இந்த பொண்ணுக்கு வீட்ல இருந்து உடுப்பு எல்லாம் கொடுத்து விட்டவர்கள் ஒரு ரப்பர் பேண்ட் கொடுத்து விட மறந்துட்டாங்களே என்று நக்கல் அடித்துள்ளார்.

மேலும் சில சந்தர்ப்பங்களில் சௌந்தர்யா எல்லோரிடமும் மாட்டிவிட்டு முழிக்கும் திருட்டு முழியையும் அற்புதமாக நடித்துக் காட்டியுள்ளார். 

மேலும் சௌந்தர்யா கோவப்பட்டால் கார்ட்டூன் ஷோ பார்த்த மாதிரி இருக்கும் என தெரிவித்து உள்ளார். இதை பார்த்த போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரித்து உள்ளார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement