• Dec 26 2024

Fans-க்காக இலவச திருமண மண்டபம்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்! ராகவா லாரன்ஸ் வைத்த ட்விஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். 

இந்த நிலையில், தனது ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் என புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். 

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வரும் ராகவா லாரன்ஸ், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.



மேலும், தொடர்ந்து தனது ரசிகர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் ராகவா லாரன்ஸ் அடுத்து அம்மாவின் பெயரில் ஒரு பெரிய திருமண மண்டபம் கட்ட ஆயத்தமாகி வருகிறார். 

அதன்படி, இதற்கான இடத்தை கூட தேர்வு செய்து விட்டதாக கூறியுள்ள லாரன்ஸ் இந்த மண்டபம் தனது ரசிகர்களுக்கு இலவச சலுகை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். 

எனினும், குறித்த திருமண மண்டபத்தில் அனைத்து இலவசம், நீங்க சிறப்பாக உங்களது திருமணத்தை நடத்தலாம் என அறிவித்த ராகவா லாரன்ஸ், ஒரே ஒரு கண்டிஷனை வைத்துள்ளார். அது என்னவென்றால் திருமணத்தில் செலவாகும் தண்ணி பில்லை மட்டும் கட்டுமாறு தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement