• Dec 25 2024

அனிருத் முதல் விஜய் வரை கீர்த்தி சுரேஷ் எதிர்கொண்ட காதல் சர்ச்சைகள்.. இதுவரை வெளிவராத பல உண்மைகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதனைத் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து இன்று முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவரே நடிகை கீர்த்தி சுரேஷ். இவரைப் பற்றி தொடர்ந்து ஏகப்பட்ட சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. ஆனால் இது எவற்றிலுமே கவனம் செலுத்தாது தன்னுடைய வேலையை திறம்பட முன்னெடுத்துச் சென்ற வண்ணம் இருக்கின்றார் கீர்த்தி சுரேஷ்.


இவர் தமிழ் சினிமாவில் ஒரு வாரிசு நடிகையாக அறிமுகமானவர். அதாவது பிரபல நடிகை மேனகாவின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் முதன்முதலில் மலையாளத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து நடிகையாக அறிமுகமான கீர்த்தி சினிமாவில் உள் நுழைந்து குறுகிய காலத்திலேயே பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார். அந்தவகையில் 2015 இல் வெளியான 'இது என்ன மாயம்' என்ற படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் முதல் படம் தோல்வியை சந்தித்தாலும் இவர் அடுத்தடுத்து நடித்த 'ரெமோ, ரஜினி முருகன்' போன்ற படங்கள் பெரியளவில் ஹிட்டை பெற்றுக் கொடுத்தன.


அதிலும் குறிப்பாக நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி என்ற படத்தில் இவரின் நடிப்பு உலகளவில் பேசப்பட்டது. இந்தப் படத்திற்காக தேசிய விருதையும் வென்றிருக்கின்றார். இந்தப் படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து விஜய், ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடிக்கத் தொடங்கினார். 

தற்போது கூட இவரின் கைவசம் 'மாமன்னன், சைரன், ரகு தாத்தா' போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கின்றார். அத்தோடு வெகுவிரைவில் நடிகர் நானிக்கு ஜோடியாகவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.


இவ்வாறு இன்று சினிமாவின் உச்சத்தில் இருப்பினும் கீர்த்தி சுரேஷ் பல சர்ச்சைகளையும், கிசுகிசுக்களையும் தாண்டித் தான் இந்த இடத்திற்கு வந்திருக்கின்றார். அதாவது கீர்த்தி சுரேஷிற்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது எனக் கூறிப் பல வதந்திகளைக் கிளப்பி விட்டிருந்தனர். 


அத்தோடு ஆரம்பத்தில் அனிருத்துடன் நெருக்கமாக இருப்பதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கூட ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பின்பு அது வதந்தி என நிரூபிக்கப்பட்டது. அதேபோல் காமெடி நடிகர் சதீஸுடன் ஒரு படவிழாவின் போது கழுத்தில் மாலையுடன் இவர்கள் இருக்கும் புகைப்படம் வெளியாக இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.


அதுமட்டுமல்லாது சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து பல படங்கள் நடித்தமையினால் அந்த சமயத்திலும் இவர்கள் இருவரையும் இணைத்து பல சர்ச்சையான கருத்துக்களை பேசத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யுடன் இணைத்து தேவையில்லாத பல சர்ச்சைக்குரிய விடயங்களை பரப்பி வருகின்றனர். 

ஆனாலும் கீர்த்தி இது எதனையுமே கண்டுகொள்ள வில்லை. அதற்கு காரணம் கீர்த்தி சுரேஷ் பள்ளி வயதிலேயே ஒருவரைக் காதலிக்கத் தொடங்கியிருக்கின்றார். இருவரையும் அந்த நபரையே காதலித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இரு குடும்பத்தினதும் சம்மதத்துடனும் சீக்கிரமே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement