• Apr 24 2026

MGR, மகாத்மா காந்தி முதல் கலைஞர், பெரியார் வரை விஜயகாந்தை காண திரண்ட மக்கள்! நெகிழ்ச்சியான தருணம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் 28ஆம் திகதி உயிரிழந்தார். இவரது மறைவு சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், சாதாரண மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி இருந்தது.

இதைத்தொடர்ந்து அவரது சமாதி சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி விஜயகாந்தின் மறைவிற்கு நேரில் செல்ல முடியாமல்  போன முன்னணி நட்சத்திரங்களும் தற்போது அவருடைய சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் இளைய தளபதி விஜய் மட்டுமின்றி மறைந்த பிரபலங்களான  மகாத்மா காந்தி, எம்ஜிஆர், கலைஞர், பெரியார் உட்பட பிரபல நட்சத்திரங்களை போல வேடமிட்ட கலைஞர்கள் கேப்டன் விஜயகாந்த்திற்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

அதன்படி, குறித்த நிகழ்வில் மறைந்த பிரபல நடிகர்களான எம்ஜிஆர், பெரியார், மகாத்மா காந்தி, கலைஞர், அப்துல் கலாம், வீரபாண்டியன் போன்றவர்களை மட்டுமின்றி பாண்டியராஜ்,ஸ்டாலின், படையப்பா ரஜினி, நடிகர் விஜய்  ஆகியோரின் வேடங்களை தரித்து பிரபல கலைஞர்கள் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்றுள்ளனர். 

தற்போது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கேப்டன் விஜயகாந்த் மீண்டும் நினைவுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement