• Dec 26 2024

இனி கிழட்டு வில்லனுக்கு எல்லாம் மவுசு கம்மி தான்..!! 150 கோடி சம்பளத்துடன் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் யாஷ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் ஹீரோக்களை விட வில்லன்களுக்கு தான் மவுசு அதிகமாக காணப்படுகிறது. ரசிகர்களும் வில்லனைத் தான் ஹீரோவாக கொண்டாடுகிறார்கள்.

அந்த காலத்தில் ஹீரோக்களுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக ஏன் அதிகமாகவே வில்லன்களுக்கு மட்டுமின்றி காமெடி நடிகர்களும் அதிக சம்பளம் வாங்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்.

இந்த நிலையில், ஒரு படத்தில் வில்லனாக நடிப்பதற்கு 150 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர். ஆனால் இந்த நடிகர் பல பிளாக்பாஸ்டர் ஹிட் படங்களை வழங்கியுள்ளார். அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளதாம். இதனால் தான் இந்த சம்பளமாம்.


அதாவது, அவர் வேறு யாரும் இல்லை.  நடிகர் யாஷ் தான்.  வரவிருக்கும் ராமாயண படத்தில் ராவணனாக நடிக்க யாசை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அதில், ராமனாக நடிக்க ரன்பீர் கபூரும், சீதையாக தென்னிந்திய நடிகை சாய் பல்லவியையும் ஏற்பாடு செய்து உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் என்ற பெருமையை யாஷ் பெற்றுள்ளார்.


ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி 21 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். அது போல நாக் அஸ்வினின் கல்கி 2898 கி.பி.யில் வில்லனாக நடிக்க 25 கோடி சம்பளமாக பெற்ற  கமலஹாசனை விட யாஷ் முந்தியுள்ளார்.

இதேவேளை, பிரசாந்த் நீல் இயக்கும் கேஜிஎப் 3 படமும் தயாராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement