• May 29 2026

திவ்யா கணேஷின் அழகிய பட்டுப் புடவை லுக்கை பார்த்தீங்களா.? இணையத்தில் செம்ம ட்ரெண்டிங்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் திவ்யா கணேஷ். இவர் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பான அன்னம் சீரியலில் வில்லியாகவும் நடித்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டது.

ஆரம்பத்தில் சட்டம் படிப்பதற்காக சென்னைக்கு வந்த திவ்யா கணேஷுக்கு, ஷார்ட் ஃபிலிமில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படியே சீரியல் துறையிலும் அறிமுகமானார். சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களிலும் நடித்துள்ளார் திவ்யா கணேஷ்.

வெள்ளித்திரை வாய்ப்பிற்காகவும் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், இவருக்கு ஒரு நடிகருடன் திருமணம் முடிவாகி நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. ஆனால், அதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் வைல்ட் கார்ட்  போட்டியாளராக உள்ளே நுழைந்தார். இவர் சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதமும், அரவணைத்த விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் அந்த சீசனின் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, சக நடிகர், நடிகைகள் விருது பெறும் போது தன்னுக்கும் அத்தகைய விருது கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறியிருந்தார். ஒரு தடவை என்றாலும் அந்த விருதை நான் வாங்கிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை. இப்போது இந்த பிக் பாஸ் விருது கிடைத்தது எல்லாவற்றிற்கும் ஈடானது என்று அவர் உணர்ச்சிவசப்பட பேசினார்.

இந்த நிலையில், திவ்யா கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய பட்டுப் புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement