• Oct 28 2024

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் அதிரடி அப்டேட்! படத்தின் டீசர் ரிலீஸ்!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் முன்னணி நடிகர் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டீசர் குறித்து படக்குழு தகவல் அறிவித்துள்ளது. 

d_i_a


திரைப்படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் உள்ளன என போஸ்டரில் குறிப்பிட்டு. டீசரின் அதிரடி வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கிறது விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் படத்தின் டீசர் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement