• Jan 10 2025

"கேம் சேஞ்சர்" ஷங்கர் சாருக்கு கம்பேக்! படத்தை கெடுப்பது இதுதான்! ரசிகர்கள் டுவிட் வைரல்!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இன்று ரிலீசான திரைப்படம் "கேம் சேஞ்சர்". இந்த திரைப்படத்தில் நடிகர் ராம் சரண், நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்கள். இந்நிலையில் வெளியாகிய இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.


தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குனர் ஷங்கர் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான கேம் சேஞ்சர் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த திரைப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடிகர் ராம் சரணுக்கு கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள இப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர்.


அந்த வகையில் டுவிட் விமர்சனங்களில் " ராம் சரண், அஞ்சலி மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்றும், ஷங்கர் அரசியல் குறித்து பேசிய விதம் நன்றாக இருந்தது, இது ஷங்கரின் கம் பேக் திரைப்படம்" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது காலங்கடந்த பழைய கதைக்களம் என்றும் கூறியுள்ளனர். அத்தோடு இன்னும் ஒரு நபர் "தேவையில்லாத பாடல்கள் திரைக்கதையை கெடுகிறது" என்று தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement