• Dec 26 2024

கயவர்களின் விமர்சனங்களை கடந்து ஜெட் வேகத்தில் புக் ஆகும் கங்குவா டிக்கெட்ஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட பொருட்க செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகரான பாபி தியோல் வில்லன் கேரக்டரில் மிரட்டி உள்ளதோடு திஷா பதானியும் இதில் தனது கவர்ச்சியை தூக்கலாக காட்டியுள்ளார்.

கங்குவா திரைப்படம் வெளியாகி முதல் நாள் முதல் காலை காட்சியை பார்த்த ரசிகர்கள் ஆகா.. ஓகோ.. என புகழ்ந்து தள்ளினார்கள். ஆனாலும் அதன் பின்பு படத்தை பார்த்த ரசிகர்கள் அதிக அளவில்  நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்து வந்தார்கள். இது இணையத்தில் பேசு பொருளானது.

d_i_a

இதைத்தொடர்ந்து கங்குவா படம் பற்றி சூர்யா சொன்ன கருத்துக்கள், இதன் தயாரிப்பாளர் 2000 கோடி வரை வசூலிக்கும் என்று சொன்னது, சிறுத்தை சிவா கொடுத்த பில்டப் ஆகியவை கடும் ட்ரோலுக்கு உள்ளானது. மேலும் ப்ளூ சட்டை மாறனும் இந்த படத்தை பார்க்க லோடு லோடா பஞ்சு கொண்டு போகணும் என்று பங்கம் பண்ணி இருந்தார்.

ஒரு கட்டத்தில் கங்குவா படம் பற்றிய நெகடிவ் கமெண்ட்ஸ்கள் அதிகரிக்க நடிகையும் சூர்யாவின் மனைவிமான ஜோதிகா, எதற்காக இப்படி நெகட்டிவ் கூறுகின்றீர்கள். தமிழ் சினிமாவில் 3டி படத்தை எடுத்த கங்குவா டீமுக்கு பாராட்டுக்கள் தான் கிடைக்க வேண்டும்.. சூர்யாவை நினைத்து பெருமைப்படுகின்றேன். குறை சொன்ன யாரும் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தப் போவதில்லை என்று பதிலடி கொடுத்திருந்தார்.


மேலும் கங்குவா திரைப்படம் வெளியான முதல் நாளில் 58 கோடிகளை வசூலித்திருந்தது. இரண்டாவது நாளில் 83 கோடிகளையும், மூன்றாவது நாளில் முடிவில் 127 கோடிகளையும் வசூலித்து இருந்தது. இதன் அதிகாரவபூர்வமான அறிவிப்பு வெளியாகி சூர்யா ரசிகர்களை குஷியாக்கி இருந்தது.


இந்த நிலையில், கங்குவா படம் பற்றிய மேலும் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கங்குவா  படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையிலும், ஒரு நாளைக்குள் 87k வரை டிக்கெட் புக்கிங் ஆகி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதாவது நான்காவது நாளில் கங்குவா திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் 87K யாக காணப்படுகின்றது.  என்னதான் கங்குவா படத்திற்கு நெகட்டிவ் குவிந்து வந்தாலும் வசூலில் படம் சக்கைப் போடு போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement