• Nov 16 2026

உருக்கமாக மன்னிப்பு கேட்கும் கங்குவா சூர்யா.. அடிபொலியாக வெளியான வீடியோ கிளிம்ஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக காணப்படுவது தான் கங்குவா திரைப்படம். இந்த திரைப்படம் எதிர்வரும் 14ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா  திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் வரலாற்று அம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளதோடு இதில் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

d_i_a

ஸ்டூடியோ கிரீன் நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள கங்குவா படம் முன்னதாக கங்குவன் என்றுதான் பெயரிடப்பட்டிருந்ததாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் இந்தப் படத்தின் தலைப்பை கங்குவா என்று மாற்றியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


சமீபத்தில் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமின்றி சூர்யாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு இருந்தார்கள். இதன்போது சிவக்குமார் சூர்யா பற்றிய பல சுவாரசியங்களையும் பேசி இருந்தார்.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கங்குவா  திரைப்படத்தின் 'மன்னிப்பு' என்ற மூன்றாவது சிங்கள் பாடல் நேற்றைய தினம் வெளியாகி உள்ளது.  இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்தான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement