• Apr 18 2026

வீட்டில் இருப்பவர்கள் சும்மா இல்லை.. இல்லத்தரசிகளின் தியாகத்தை பாராட்டிய கெளதமி.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகை கெளதமி சமீபத்தில் கூறிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. பெண்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் பொறுப்புகள் குறித்து அவர் பகிர்ந்த கருத்து பலரிடமும் சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.


அவர் கூறியதாவது, “வேலைக்கு செல்லும் பெண்களைக் காட்டிலும், வீட்டில் HOMEMAKER-ஆக இருப்பவர்களுக்குத் தான் அதிக சவால்கள் இருக்கின்றன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தனிப்பட்ட இடம், வெளிப்புற ஆதரவு, மற்றும் ஒரு கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை இருக்கும். ஆனால், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அந்த மாதிரியான வெளிப்புற ஆதரவு எப்போதும் கிடைக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டை கவனிப்பது ஒரு சாதாரண வேலை அல்ல என்றும், அது முழுநேர பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் கவனித்தல், குழந்தைகள், வீட்டுப்பணிகள், உணவு, உறவுகள் என அனைத்தையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதால், homemaker பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

“வீட்டில் இருப்பதால் நாம சும்மா இருக்கிறோம் என்று யாரும் நினைக்கக் கூடாது. அது ஒரு பெரிய பொறுப்பு. அதனால், ‘நான் வேலைக்கு போகவில்லை, வீட்டில் தான் இருக்கிறேன்’ என்று தங்களை குறைத்து நினைக்க வேண்டாம்.” என அவர் பெண்களிடம் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement