• Dec 27 2024

கோடிகளில் சம்பளம் வாங்குமளவுக்கு உயர்ந்த கவின்! ஸ்டார் படத்திற்கு வாங்கிய சம்பள விபரம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான நடிகர் தான் கவின். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர் நடிகராக அவதாரம் எடுத்தார். இவர் நடித்த டாடா திரைப்படம் இவரது கேரியரில்  மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது.

அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்த திரைப்படம் தான் ஸ்டார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பார்த்தவர்கள் எல்லோருமே தியேட்டர்களிலிருந்து வெளி வரும்போது கண்கலங்கியவாரே கவினை பாராட்டி இருந்தார்கள்.

இந்த நிலையில், ஸ்டார் படத்தில் நடிப்பதற்காக நடிகர் கவின் வாங்கிய சம்பள விவரம் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளது.


அதன்படி இந்த படத்தில் நடிப்பதற்காக கவின் சுமார் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ஒரு படத்தில் நடிப்பதற்கு 35 முதல் 40 லட்சம் வரை சம்பளம் வாங்கிய கவின் தற்போது கோடியில் சம்பளம் வாங்க தொடங்கியுள்ளார்.

இதேவேளை ஒரு நடிகரின் மார்க்கெட் தான் அவரது சம்பளத்தை நிர்ணயிக்கும் என்று கவின் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement