• Dec 26 2024

செழியன் கன்னத்தில் ஓங்கி அறைந்த ஜெனி... ரூமுக்குள் தொடர்ந்த வாக்குவாதம்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், செழினை ரூமுக்குள் தள்ளி கதவை சாத்திவிட்டு செல்கிறார் பாக்கியா. இதை பார்த்து ஷாக் ஆன ஜெனி, நீதான் வெளிய இருந்து கதவை சாத்திட்டு உள்ள வந்தியா? என கோபப்பட, வெளிய பூட்டிட்டு எப்படி உள்ள வர முடியும் என்று செழியன் கேட்க, அதற்கு நீ பண்ணுவ எல்லாத்தையும் பண்ணுவ என ஜெனி கோபப்படுகிறார்.

கதவை திறக்க சொல்லி ஜெனி கதவை தட்டிக் கொண்டிருக்க, இதுவரைக்கும் நான் எவ்வளவோ முறை உன் கிட்ட பேச முயற்சி பண்ணி இருக்கன் ஆனால் என்னால பேச முடியல. இந்த முறை சரி தயவு செய்து நான் பேசுவதை கொஞ்சம் கேளு என செழியன் சொல்ல, அதற்கு நான் எதுக்கு உன்கிட்ட பேசணும் எதுவுமே இல்லை என்று ஜெனி கோபப்படுகிறார்.

உன்னை எனக்கு எவ்வளவு வருஷமா தெரியும். எவ்வளவு லவ் பண்ணி போராடி கல்யாணம் பண்ணினான். அப்படி இருந்து உனக்கு அந்த மாதிரி முக்கியமா போயிட்டாளா அவள் என கோபப்படுகிறார். நான் செஞ்சது தப்பு தான். என்னை மன்னித்து ஏற்றுக் கொள் என செழியன் கெஞ்ச,  அது மட்டும் முடியாது என ஜெனி சொல்கிறார்.


அதற்கு செழியன் நீ இல்லனா நான் செத்துப் போயிடுவேன் என்று சொல்ல, உன் கூட இருந்தா நான் செத்து போயிருவேன் என ஜெனி சொல்கிறார். இதையெல்லாம் வெளியில் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பதறுகிறார்கள். ஜெனி திரும்பவும் கதவை தட்ட மரியம் கதவை திறக்கப் போகிறார். ஆனால் பாக்கியா தடுத்து விடுகிறார்.

பிறகு நான் என்ன பண்ணின நீ நம்புவ என செழியன் கேட்க, எனக்காக நீ என்ன பண்ணாலும் நான் உன்னை நம்ப மாட்டேன் என்று ஜெனி சொல்ல, காலில் விழுந்து கெஞ்சுகிறார் செழியன். மேலும் நீ என்னை மன்னிச்சி ஏத்துக்க மட்டும் எழும்ப மாட்டேன் என இருக்கிறார்.

கொஞ்ச நேரம் ரூமில் சத்தம் இல்லாமல் இருக்க வெளியில் எல்லாரும் பதறுகிறார்கள். எழில் போய் பார்த்துட்டு வாரேன் என்று சொல்ல, பாக்கியா வேண்டாம் கொஞ்சம் வெயிட் பண்ணலாம் என்கிறார். பிறகு செழியினை பளார் பளார் என அறைகிறார்  ஜெனி.

மேலும் உனக்கு எப்படி எனக்கு துரோகம் பண்ண மனசு வந்துச்சு என்று ஜெனி பேச, இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சொல்ல, இதெல்லாம் ஒரு காரணமாக சொல்லுவியா என ஜெனி கோவப்படுகிறார். மீண்டும் செழியனை அறைகிறார்.

மீண்டும் உள்ளே அமைதியாக இருக்க வெளியில் இருப்பவர்கள் ஓடிவந்து கதவை திறக்க, இருவரும் கட்டிப் பிடித்து நிற்கிறார்கள். இதை பார்த்து எல்லாரும் சந்தோஷப்படுகிறார்கள் இதுதான் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

Advertisement

Advertisement