• Dec 26 2024

பிக்பாஸ் மணி - ரவீனா குடும்பச்சண்டை? பிரிகிறார்களா காதலர்கள்?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு இடையே மட்டுமின்றி போட்டியாளர்களின் குடும்பங்களுக்கு இடையே கூட பகையை வளர்த்து விட்டதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்பதும் போட்டி முடிந்து வெளியே வந்தால் கூட அந்த பகைமை தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். 

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் ஏழு நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட ஐசு மற்றும் நிக்சன் இடையே மட்டும் இன்றி அவர்களது குடும்பத்திற்கு இடையேயும் பிரச்சனை வந்து ஒருவருக்கொருவர் பார்த்தால் பேசிக் கொள்வது கூட இல்லை என்று கூறப்படுகிறது. 

அந்த வகையில் தற்போது அடுத்த கட்டமாக மணி மற்றும் ரவீனா குடும்பத்தினர் இடையே சில மன வருத்தங்களை உண்டாக்கி விட்டதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது மணி மற்றும் ரவீனா ஆகிய இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தார்கள் என்பதும் மணியின் மடியில் ரவீனா படுத்து கொள்வது, இருவரும் கட்டி பிடித்துக் கொள்வது டான்ஸ் ஆடுவது போன்றவை நிகழ்ந்தது என்பது தெரிந்தது.  

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை மணி - ரவீனா மட்டும் இன்றி அவர்களது குடும்பத்துக்கு இடையே கூட பிரச்சனை ஏற்பட்டு விட்டதாகவும் இதனால் மணி - ரவீனா காதல் பிரிய கூட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே அர்ச்சனா மீது மாயா மற்றும் பூர்ணிமா கடுப்பில் இருக்கும் நிலையில், தினேஷ் மீது விசித்ரா கடுப்பில் இருக்கும் நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பல பகைமைகளை உருவாக்கி விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement