• Dec 27 2024

அண்ணாமலையை அசிங்கப்படுத்த நினைத்து மண்ணைக் கவ்விய வாசு! முத்துவுக்கு விழுந்த பலத்த அடி! சீனியரான ரோகிணி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

அதில், மீனா - முத்து உட்கார்ந்திருக்க வாசுதேவனின் மனைவி அடுத்த ஆளை பிரச்சனை பண்ண அனுப்பி வைக்க, அவர் முத்துவின் முதுகில் பளார்  என அடிக்கிறார். பின்பு தனது நண்பன் என நினைத்து அடித்ததாக சொல்ல, இதைப் பார்த்து மீனா அவரிடம் சண்டைக்கு போக பதிலுக்கு அவரும் சண்டைக்கு வருகிறார். ஆனால் இடையில் முத்து இருவரையும் சமாதானம் பண்ணி விட்டு மீனாவை அழைத்துச் செல்கிறார். பிறகு இதெல்லாம் வேணும்னே நடக்கிற மாதிரி இருக்கு என முத்து சொல்ல, யார் இப்படி செய்யப் போறாங்க அப்படி என்று மீனா கேட்கிறார்.

இதை தொடர்ந்து பார்வதி மீனாவை கூப்பிட,  நான் போயிட்டு வாரேன் என மீனா சொல்ல, முத்து வேணாம், நீ என் கூடவே இரு என சொல்கிறார். அதற்கு மீனா, நான் உங்களை பார்த்துக்கிட்டே தான் இருப்பேன் என்று சொல்லி உள்ளே செல்கிறார்.

இன்னொரு பக்கம் அண்ணாமலையும் அவரது நண்பரும் வர, முத்து அவர்களை கூப்பிட்டு உட்கார வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் விஜயா அங்கு வந்து, ஏன் இங்க உட்கார்ந்து இருக்கீங்க, சம்பந்தி உங்க கிட்ட பேசணும் என்று கூப்பிட்டார். நீங்க போங்க என அண்ணாமலை அனுப்பி வைக்கிறார். அவர் வாசுதேவன்  அருகே செல்ல, வேணும் என்றே அவர் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.


அதன்பின், அங்கு ஆபீஸ் அதிகாரியாக வேலை செய்த ஒருவர் அண்ணாமலை பார்த்துவிட்டு, எப்படி இருக்கீங்க என நலம் விசாரிக்கிறார். மேலும் நேர்மையான ஆளு நீங்க தான் என பாராட்ட, அதைக் கேட்டு வாசுதேவன் கடுப்பாகிறார். ஆனால் சில  சமயத்துல நாம நினைக்கிறது நடக்கிறது இல்ல, குப்பமேடு  எல்லாம் கோபுரமா மாறிடும் என அண்ணாமலை  அவமானப்படுத்துவது போல வாசுதேவன் பேச, நல்ல வேலை இந்த நேரத்தில் முத்து இங்க இல்ல. இருந்து இருந்தா பெரிய பிரச்சனை உருவாகி இருக்கும் என நிம்மதி அடைகிறார் அண்ணாமலை.

மறுபக்கம் ரோகிணி ஏற்பாடு செய்த நபர் முத்துவின் பின்னாடி அமர்ந்து நீங்களும் நானும் ஆறு மாசத்துக்கு முன்னாடி அசோக் நகர் ஒயின் ஷாப்பில் சந்திச்சோம் என பேச்சு கொடுக்க, உங்களை பார்த்த மாதிரியே இல்லை என முத்து சொல்கிறார். அதற்கு அவர் பார்க்க பார்க்க தான் தெரியும். அத உங்களுக்கு தெரிய வைக்க தானே போகிறேன் என தொடர்ந்து முத்துவுக்கு பேச்சு கொடுக்கிறார்.

அதன் பின் ரோகிணியின் அப்பா வர நேரம் எடுப்பதால் முதலில் ஸ்ருதிக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன் செஞ்சிடலாம் என விஜயா அண்ணாமலையிடம் கேட்க, நீயே யோசிச்சு முடிவெடு என அவர் சொல்லிவிடுகிறார்.

முதலில் ஸ்ருதிக்கு பண்ணிடலாம் என்று விஜயா முடிவெடுக்க, மனோஜ் ரோகிணி தான் சீனியர் அதனால ரோகிணிக்கு தான் பண்ணனும் என்று சொல்ல, விஜயாவும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம். அவங்க அப்பா வரட்டும். அதுக்கு முன்னாடி ஸ்ருதிக்கு பண்ணிடலாம் என்று வாசுதேவன் குடும்பத்தில் பேச செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement