• Apr 18 2026

மாயாஜால உலகுக்கு தயாராகுங்கள்! ஜெயம்ரவி அடுத்த படம்!பெயருடன் வெளியானது 1ஸ்ட லுக்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்றும் பல பெண் ரசிகர்களின் "லவ்வர் பாய்" என்ற பெயருடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவரே ஜெயம் ரவி. துணை இயக்குனராக சில படங்களில் வேலை செய்திருந்தாலும். முதன் முறையாக தமிழ் சினிமாவுக்கு "ஜெயம்" என்ற திரைப்படத்தின் மூலமே கதாநாயகனாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை வென்றார்.


இதன் வெற்றியை தொடர்ந்தே ரவி என்ற தனது பெயரை சினிமாவுக்காக ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். இவர் பல அருமையான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் இவர் "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தில் "ராஜ ராஜ சோழன்" கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமானார். அவ்வாறே இவர் அடுத்ததாக நடிக்க போகும் திரைப்படத்தின் 1ST லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 


அர்ஜுன் JR இயக்கத்தில் , ஜெயம் ரவி நடிப்பில் , AR ரகுமான் இசையில் வெளியாகும் இந்த திரைப்படத்திற்க்கு "ஜீனி" என பெயர்வைத்துள்ளதுடன் குறித்த போஸ்டரை தனது X தள பக்கத்தில் 'மாயாஜால அனுபவத்திற்கு தயாராகுங்கள்' என்ற டேக் லைனுடன் ஜெயம் ரவி பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement