• Dec 26 2024

ரோகிணி தான் என் அம்மாவா? ஒட்டு கேட்ட கிரிஷ் அதிர்ச்சி.. இனிமேல் தான் ட்விஸ்ட்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலின் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான ரோகிணி பல பித்தலாட்டங்கள் செய்த நிலையில் அவர் இன்னும் யாரிடமும் பிடிபடாமல் இருக்கிறார்.

ரோகினிக்கு சிறுவயதிலேயே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது என்ற உண்மை இதுவரை யாருக்கும் தெரியாது. அதேபோல் சிங்கப்பூரில் அப்பா இருப்பதாக சொல்வதும் பொய் என்பதும் ரோகிணிக்கு அப்பா என்ற ஒருவரே இல்லை என்பதும் அவருக்கு அம்மா மட்டும்தான் உள்ளது உள்ளார் என்பதும் இந்த சீரியலில் உள்ள வித்யா மற்றும் அவருடைய அம்மாவை தவிர எந்த கேரக்டருக்கும் இதுவரை தெரியாது.

தன்னுடைய பித்தலாட்டத்தை எல்லாம் மறைத்துக் கொண்டிருக்கும் ரோகிணி, முத்து - மீனா மீது வன்மத்தை காட்டி வருவது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ரோகிணி  பிடிபடவே மாட்டாரா என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த வார முன்னோட்ட வீடியோவில் ரோகிணி அம்மா, ‘கிரிஷ் உன்னுடைய குழந்தை, அவனை விட்டு விடாதே’ என்று கூறும்போது ’கிரிஷ் நான் பெற்ற பிள்ளை, அவனை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என்று கூறுகிறார். இதனை தற்செயலாக கிரிஷ் ஓட்டு கேட்டு வருகிறார். இதனை அடுத்து கிரிஷூக்கு ரோகிணி தான் தன்னுடைய அம்மா என்று தெரிந்து விட்டதை அடுத்து இனிமேல் தான் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிஷூக்கு தெரிந்த இந்த உண்மை முத்து மீனாவுக்கு தெரிய வருமா? குறிப்பாக மனோஜ், விஜயாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்? என்பதை நினைத்து பார்க்கவே பரபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement