• Apr 07 2026

மன்சூர் அண்ணனுக்கு சீட் கொடுங்க.. இல்லனா தீ குளிப்பேன்.! கூல் சுரேஷ் அதிரடி முடிவு

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் சில படங்களில் நாயகனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கூல் சுரேஷ். இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மேலும் பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது.

இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராகவும் காணப்படுகிறார். மேலும் திரையரங்குகளில் புதிய படங்கள் வெளிவரும் போது, அந்தப் படத்தில் ஹீரோ எடுக்கும் கெட்டப்பை அல்லது படம் சொல்லும் கருத்தை வைத்து திரையரங்க வாசலில் ரகளை செய்யும் பழக்கம் உள்ளது.

கூல் சுரேஷின் பேச்சுகள் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளன. அவர் காமெடி கலந்த பாணியில் அரசியல் மற்றும் தனிப்பட்ட பல விடயங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.


இந்த நிலையில், அவர் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கூறிய பேச்சு வைரலாகியுள்ளது. அதன்படி அவர் கூறுகையில், மன்சூர் அலிகான் அண்ணனுக்கு தேர்தலுக்காக சீட் கொடுக்கப்படாவிட்டால் தீக்குளிப்பேன்.

2026 இல் மன்சூர் அண்ணனுக்கு தயவு செய்து ஒரு சீட் கொடுங்கள். இல்லையெனில் அந்த இழப்பு அந்த தொகுதி மக்களுக்கு தான். இதனை நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன். நான் உண்மையை தான் சொல்லுவேன்  என்றார்.

தமிழகத்தில் தற்போது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மன்சூர் அலிகான் ஏற்கனவே கட்சி மாறி பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், கூல் சுரேஷின் பேச்சு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement