• Dec 26 2024

பாக்கியாவை வீட்டை விட்டு துரத்தியடித்த கோபி? கணேஷ் பிரச்சினை ஓவர்! இனி கோபிக்கு சங்கு தான்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், கணேஷ் இருக்கிற இடத்தை கண்டுபிடித்த பாக்கியா குடும்பம், அவரை அடித்து துவைத்து பொலிஸில் கொடுக்கிறார்கள். பழனிச்சாமி சரியான நேரத்திற்கு பொலிஸாருடன் வந்து கணேஷை பிடித்து செல்கிறார்கள்.

மறுபக்கம், கோபியும் ஈஸ்வரியும் பாக்கியா பற்றி பேசி, அவ சொல்ற எதையும் கேக்குறது இல்ல என திட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கோபி பாக்கியாவை வீட்டை விட்டு துரத்துமாறு சொல்லுகிறார். அதற்கு ஈஸ்வரி இது பாக்கியாவின் வீடு அவ தான் நம்மள ஒரு நாள் வீட்டை விட்டு துரத்த போறா என சொல்ல, இடையில் ராமமூர்த்தி சம்பந்தம் இல்லாமல் கதைக்காதீங்க என அவர்களுக்கு பேசுகிறார்.


இதைத்தொடர்ந்து பாக்கியா, அமிர்தாவை நிலாவையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். அங்கு  நடந்தவற்றையெல்லாம் சொல்லுகிறார். இனி கணேசால் பிரச்சினை வரவே வராது என்று ஈஸ்வரிக்கு சொல்லுகிறார்.

இதை அடுத்து பாக்கியா பிரச்சினை ஒரு மாதிரி முடிஞ்சு, இனி அடுத்தது என் பிரச்சனை தான், எத்தனை நாளுக்கு தான் ஆபீஸ் போகலன்னு மறைக்கிறது என்று ராதிகா வர முன் கட்டிலுக்கு அடியில் ஒழிந்து கொள்ள செல்கிறார் கோபி. இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement