• Dec 25 2024

பலமில்லியன் கடந்து டிரெண்டிங்கில்! கொடிகட்டி பறக்கும் கோல்டன் ஸ்பாரோ பாடல்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். இவர் தவிர அனிகா சுரேந்திரன். மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர் சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.


ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வன்டர்பார் பிலிம்ஸ், ஆர் கே புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.


சில மாதங்களுக்கு முன் இந்த படத்திலிருந்து 'கோல்டன் ஸ்பாரோ எனும் முதல் பாடல் வெளியானது அறிவு எழுதிய இப்பாடலை சுபலாஷ்னி, தனுஷ், ஜி.வி.பிரகாஷ் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடினர்.


பாடல் வெளியானது முதல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வந்த இந்த பாடல் இப்போது யு-டியூப்பில் 5 கோடி பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து வலைதளங்களில் டிரெண்டிங்கில் இடம் பெற்று வருகிறது.


Advertisement

Advertisement