• Apr 24 2026

மொத்த பிளானும் ஊத்தியதால்.. ரொமான்டிக் ரூட்டை கையில் எடுத்த கோமதி.! கலகலப்பான ப்ரோமோ

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்பொழுது கோமதி சொன்ன பொய்யால் பாண்டியன் அவரோடு கதைக்காமல் இருக்கிறார். இது இப்படி இருக்க இனி நிகழவிருக்கும் எபிசொட்டிற்கான ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. 

அதில், கோமதி கை, கால் எல்லாம் வலிக்குது.. குளிருது என்று காய்ச்சல் வந்த மாதிரி நடிக்கிறார். அதைக் கேட்ட சரவணன் கோமதியை தொட்டுப் பார்த்திட்டு காய்ச்சலே இல்லயே என்கிறார். பின் கோமதி அது உள் காய்ச்சல் காயுது என்கிறார். அதைத் தொடர்ந்து பாண்டியன் சரவணனைப் பார்த்து வாடா கடைக்குப் போகலாம் என்கிறார்.


பின், அரசி இப்புடி எல்லாம் செய்யாமல் Romantic-ஆ ஏதாவது Try பண்ணுங்க என்கிறார். அதுக்கு கோமதி கடிதம் ஒன்றை எழுதிக் கொண்டு போய் பாண்டியன் கிட்ட கொடுக்கிறார். அப்ப, இதைப் பார்த்த பிறகு தன்னும் உங்க மனசு மாறுதோ என்று பார்ப்போம் என்று சொல்லுறார்.

அந்த நேரம் பார்த்து கடைக்கு ஒராள் வந்து முட்டை கேட்க பாண்டியன் அந்த கடிதத்தில முட்டையை சுத்திக் கொடுக்கிறார். அதைப் பார்த்த கோமதி அந்த கடிதத்தை வாங்குவதற்காக அவங்க பின்னாடியே போறார். இதுதான் இனி நிகழவிருப்பது.... 

Advertisement

Advertisement