• Dec 25 2024

’குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு திடீரென நிறுத்தமா? அஜித் மேனேஜர் முக்கிய தகவல்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் உருவாகும் ’விடாமுயற்சி’ படம் ஒரு ஆண்டுக்கு மேலாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இன்னும் பாதி படம் கூட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தான் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இரண்டே நாட்களில் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ’குட் பேட் அக்லி’ படத்தின் ஸ்டண்ட் காட்சி மற்றும் அஜித்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்க திட்டமிடப்பட்டதாகவும் இந்த படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரம் வரை நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் இரண்டே நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்பட்டதை அடுத்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் ஜூன் 7-ம் தேதி வரை ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் சமீபத்தில் தேர்தல் நடந்ததால் ஒருநாள் மட்டும் படப்பிடிப்பை நிறுத்தப்பட்டதை மொத்தமாக நிறுத்தப்பட்டதாக சிலர் வதந்தியை பரப்பி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

'குட் பேட் அக்லி’ படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான பாடல் கம்போசிங் பணியை தேவிஸ்ரீ பிரசாத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement