• Dec 25 2024

தமிழ் நடிகையை காதலிக்கும் அமீர்கானின் உறவினர்.. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தமிழில் சில திரைப்படங்களில் நடித்த நடிகையை பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் உறவினர் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் வினய் நடித்த ’உன்னாலே உன்னாலே’ ’ஜெயங்கொண்டான்’ மற்றும் ‘வா’ ’கல்யாண சமையல் சாதம்’ ’அரிமா நம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை லேகா வாஷிங்டன். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் லேகா வாஷிங்டனை அமீர்கான் உறவினரும் நடிகருமான இம்ரான்கான் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். நான் ஒரு நேர்மறையான வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்கிறேன் என்றால் அதற்கு லேகா வாசிங்டன்  தான் காரணம், நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த போது அவர் எனக்கு உதவியாக இருந்தார், என்னை நன்றாக கவனித்துக் கொண்டார், அவர் இல்லாமல் ஒரு வாழ்க்கையை என்னால் வாழ முடியுமா என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து லேகா வாஷிங்டனை நடிகர் இம்ரான்கான் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.



அமீர்கான் உறவினர் இம்ரான்கான் ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு அவந்திகா என்ற பெண்ணை திருமணம் செய்து அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார் என்பதும் இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் லேகா வாஷிங்டனை விரைவில் திருமணம் செய்ய உள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement