• Dec 25 2024

’குட் பேட் அக்லி’ பட தயாரிப்பாளர் மீது குண்டர் சட்டமா? அப்ப இந்த படமும் அவ்வளவு தானா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

அஜித் நடிக்க இருக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பாளர் மீது  குண்டர்  சட்டம் பாய வாய் வாய்ப்பிருப்பதாகவும் அதனால் இந்த படமும் தொடங்குவதற்கு கால தாமதமாகும் அல்லது ரத்து செய்யப்படும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் நடித்த ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பதும் அவ்வப்போது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் உள்பட பல்வேறு பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு கால தாமதம் ஆகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படத்தை அம்போ என விட்டுவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தை தொடங்க அஜித் திட்டமிட்ட நிலையில் இந்த படத்தை இந்திய திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த புகார் கொஞ்சம் சீரியஸ் ஆனது என்பதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய கூட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை அப்படி நடந்தால் ’குட் பேட் அக்லி’ படம் தொடங்குவதற்கு தாமதமாகும் அல்லது ரத்து செய்யப்படும் என்றும் திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்வது என்பது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த தகவல் முழுக்க முழுக்க  வதந்தி  என்றும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கும், திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பில் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement