• Dec 25 2024

குமரன் சாரின் அடுத்த சீரியலிலும் நான் இருக்கேன்.. ’தமிழும் சரஸ்வதியும்’ நடிகர் தகவல்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த சீரியலின் குழுவினர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி அளித்தனர். அதில் அந்த சீரியலில் நடித்த கேபிஒய் யோகி, குமரன் சாரின் அடுத்த சீரியலிலும் நான் இருக்கிறேன் என்ற தகவலை தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியல் மூன்று ஆண்டுகளாக விறுவிறுப்பாக சென்றது என்பதும், இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து சீரியல் குழுவினரே வருத்தம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தமிழும் சரஸ்வதியும்’  சீரியலில் ஹீரோ தீபக் என்பவர் தமிழரசன் என்ற கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவருடைய நெருங்கிய நண்பரான நமச்சிவாயம் என்ற கேரக்டரில் கேபிஒய் யோகி நடித்திருந்தார். அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இந்த சீரியல் முடிந்தது குறித்து யோகி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.



‘குமரன் சார் அவர்களை இந்த சீரியல் மூலம் தான் நான் முதல் முதலில் சந்தித்தேன், இந்த மூன்று வருடமும் எனக்கு மிகவும் முக்கியமான வருடம், என்னுடைய முதல் சீரியல் இதுதான், இந்த வாய்ப்பை நான் தவற விட்டிருந்தால் என்னைவிட முட்டாள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள், இந்த சீரியலின் ஹீரோ தீபக் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார், அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்’ என்று தெரிவித்தார்.

மேலும் என் கேரக்டருக்கு குமரன் சார் அவர்கள் நல்ல முக்கியத்துவம் கொடுத்தார், எனக்கு நல்ல வாய்ப்பாக இந்த சீரியல் அமைந்தது, ’தமிழும் சரஸ்வதியும்’  சீரியல் முடிந்தது என்று வருத்தப்பட்டாலும் அவருடைய அடுத்த சீரியலில் எனக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார், அதனால் நான் சந்தோஷத்தில் இருக்கின்றேன்’ என்று யோகி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement