• Dec 25 2024

அஜித்தின் ‘குட் பேட் அக்லி.. டைட்டில் கூட சொந்தமா யோசிக்க தெரியாதா? கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

அஜித் நடிக்க இருக்கும் 63 வது படத்தின் டைட்டில் சற்றுமுன் வெளியானது என்பதும் இந்த படத்திற்குகுட் பேட் அக்லிஎன்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த டைட்டிலே காப்பி என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,  தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம்குட் பேட் அக்லி’. இந்த படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த நிலையில் இந்த படத்திற்குகுட் பேட் அக்லிஎன்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதே டைட்டிலில் கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டரை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் விஜய் ரசிகர்கள்ஒரு டைட்டிலை கூட சொந்தமாக யோசிக்க தெரியவில்லையா? என்று கலாய்த்து வருகின்றனர்

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பேகுட் பேட் அக்லிஎன்ற திரைப்படத்தில் ஸ்ரீஜித் விஜய் மற்றும் மேக்னா ராஜ் ஆகிய இருவரும் நாயகனாக நடித்துள்ளனர். இந்த படம் மலையாளத்தில் ஒரு தோல்வி படம் என்றும் கூறப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மலையாளத்தில் ஏற்கனவே வைத்த டைட்டிலை அஜித் படத்திற்கும் வைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement