• Dec 25 2024

ஆண்டவர் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! தக் லைப் ஷூட்டிங் முடிந்தது! மகிழ்ச்சியில் மணிரத்தினம் டீம்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் தக் லைப்' இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இதன் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், டில்லி, புதுச்சேரி, கோவா போன்ற பகுதிகளில் 120 நாட்களுக்கு மேல் நடத்தினர் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. 


இப்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் இரவு பார்டி உடன் கொண்டாடியுள்ளனர். இதில் கமல், சிம்பு, மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதனிடையே இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை சுமார் ரூ. 149.70 கோடிக்கு பிசினஸ் ஆகியுள்ளதாம். இதுவரை கமல் படங்களை விட அதிக தொகைக்கு இந்த படம் விற்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த திரைப்படம் தொடர்பான மேலதிக தகவல்கள் இனிவரும் நாட்களில் திரைப்பட குழு அறிவிக்கும். 


Advertisement

Advertisement